காதல்
சொல்வது இல்லை காதல். உணர்வதும், உணர்த்துவதும் தான் காதல்.
1. அன்பு
எப்பொழுதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல, என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு.
2. அணைப்பு
உன்னை விட்டு நீங்காமலே இருப்பேன், என்னை அணைப்பது நீயாக இருந்தால், உன்னை இறுக்கி அணைத்து கொண்டே...!
3. சங்கமம்
என்னுடைய அனைத்து உணர்வுகளும் சங்கமம் ஆக வேண்டும் உன்னுடன், உன் இதயத்தோடு கலந்து…!
4. முத்தம்
உன்னுடைய அன்பு முழுவதும் எனக்கு கிடைக்க வேண்டும் முத்தங்களாக…!
5. வெட்கம்
உன்னுடைய வெட்கத்தை பார்க்க ஆசையாக உள்ளது, எனக்காக ஒரே ஒரு முறை நடிப்பாயா…!
6. சொல் பேச்சு
அவள் பின்னால் இருந்து யாரோ சொல்கிறார்களாம் நான் ஏமாற்றுகிறேன் என்று, அதனால் அவள் முன்னால் இருக்கும் என்னை நம்ப மறுக்கிறாள்…!
7. காதலை அறிந்து கொள்ள
என் இதயத்தின் துடிப்பையும், கண்களின் தவிப்பையும் உணர்ந்தாலே போதும், என் காதலை நீ அறிந்து கொள்ள எவ்வளவு உண்மையானது என்று…!
8. ஆசை
‘ஆசை’ என்ற வார்த்தையை கேட்கவே ஆசையாக உள்ளது உன் உதடுகளில் இருந்து வெளிவரும் பொழுது…!
9. என்றும் என்றென்றும்
உன் தாகம் தீர்க்க நான் வேண்டும் என்றும் என்றென்றும் உன்னுடன் உன் கணவனாக…!
10.சுகம்
ஏங்க வைப்பது நீ என்றால் ஏங்குவதும் கூட சுகம் தான்…!
11. நரகம்
உண்மையான அன்பை சந்தேகப்படுபவர்கள் நிச்சயம் நரகத்திற்குத்தான் செல்வார்கள், அவளுக்கும் அங்கு செல்ல ஆசை போல தினமும் என்னை காயப்படுத்துகிறாள்…!
12. கண்ணீர்
கண்கள் கூட நாம் சொல்வதை செய்ய மறுக்கிறது, எதிர்பார்ப்புகள் ஏமாற்றப்படும் பொழுது…!
மனைவி
மனைவி என்ற வார்த்தையின் ஆழத்தையும், அன்பையும் உணரவைத்து விட்டால் என்னை, அவள் என் அருகில் இல்லை என்றாலும், என்னுடன் வாழ்ந்து, என்னை நினைத்து கொண்டே…!
நன்றி
உன் தலையணைக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன், ஏன் என்றால், ஒழிந்து கொள்ள இடம் கொடுக்கிறதே உன் செல்போனுக்கு, என்னுடன் பேசும் பொழுது யாரேனும் வந்து விட்டால்…!
ஆவல்
அவளது குரலை கேட்க ஆவலுடன் போன் செய்தேன், ஆனால் அவளோ! “ அம்மா " என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்து விட்டால் என் ஆவலை….!
ஏக்கம்
ஒவ்வொரு நொடியும் ஏங்குகிறேன் உன் விரல்களின் வருடல்களுக்காக…!
என் உடலின் வெப்பம் அதிகமாவதை உணர்கிறேன், உன்னை அணைக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதே….!
உபதேசம் செய்தேன் அவள் உணரவில்லை, உணர்த்துவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை...!
நம் உயிரே நம்மை கத்தியால் குத்தினால் நாம் என்ன செய்வது, இறப்பதை தவிர வேறு வழி இல்லை...!
இது தான் காதலா?
அவள் என்னிடம் பேசாத பொழுது மரணத்தை தேடினேன், ஆனால் அந்த மரணத்தையும் வெற்றி பெற்றதாக உணர்கிறேன் அவளது குரலை கேட்டவுடன்! இது தான் காதலா?
ஒரு முத்தத்திற்காக என்னை தவிக்க விடுகிறாள், பாவம் அவளுக்கு தெரியவில்லை, அவளது மொத்த உதடுகளும் என்னுள் அடங்கப்போகிறது என்று…!
எனக்காக பொருட்களை வாங்க சென்றால் கூட, என்னையும் அறியாமல் என் கண்கள் அவளுக்காக தேடுகிறது…!
மன்னிப்பாயா
என்னையும் அறியாமல் தவறு செய்து விடுகிறேன், என்னவளின் சூழ்நிலைகளை புரிந்து கொண்டே, உன்னுடன் பேச வேண்டும் என்ற ஆசையில்..! மன்னிப்பாயா ?
ஆண்டுகள் பல காத்திருந்தேன் உன் வருகைக்காக, ஆனால் நீயோ, கோபித்துகொண்டு சென்றுவிட்டாய், என் 5 நிமிட தாமதத்திற்காக…! ஏண்டி இப்டி பண்ற ஹ்ம்ம்…!
காதலில் சுகமே காத்திருப்பது தான், அதுவே இங்கு சுமையாக மாறினால் நான் என்ன செய்வது, என் உயிர் காதலியே…!
அவளை அவளே ரசிக்க ஆரம்பித்து விட்டால், என் மேல் உள்ள காதலாலா, இல்லை நான் ரசிக்கிறேன் என்பதாலா…!
ஞானி
நானும் ஞானி ஆகிவிட்டேன் ஒவ்வொரு நாளும் என் உடலை விட்டு உயிரை பிரித்து உன்னுடன் அனுப்பி விடுகிறேன்…மனது எப்பொழுதும் உன்னுடனே உன்னையே சுற்றி வருகிறது!
என் வாரத்தைகளும் முத்துக்கள் தான், ஏனோ உனக்கு புரியவில்லை நான் பேசும் ஒவ்வொரு வாரத்தைகளும் என் ஆழ் மனதில் இருந்து வருபவை என்று…!
அந்த காற்றுக்கும் இடம் இல்லாமல் போகும் நம் இருவருக்கும் இடையில், நீ என் அருகில் இருந்தால்…!
என் உதடுகளின் ரேகை உன் கன்னங்களிலும், உன் கை விரல் நகங்களின் ஆழம் என் என் முதுகிலும் என்று பதியுமோ…!
உன் தலைமுடி மீது என் தலை வைத்து, படுத்து உறங்க என்னை அனுமதிப்பாயா…!!!
அனுபவ வரிகள்
அளவுக்கு அதிகமான பாசம் வைத்தேன் உன்னிடம், அதனால் தான் என்னை அடிமைப் படுத்தி, சில நேரம் அவமான படுத்துகிறாயோ?
கவிதை
அனைவரும் புரிந்துகொள்ள நான் கட்டுரை எழுதவில்லை, என்னவளுக்கு மட்டுமே புரியும் வரிகள்தான் கவிதை.
நாம் வாழ்ந்த நாட்களை நினைத்து பார், அப்போது தான் தெரியும், அவை நினைவுகள் இல்லை, உயிர் உள்ள நிஜங்கள் என்று....!
அளவுக்கு அதிகமான பாசம் வைத்தேன் உன்னிடம், அதனால் தான் என்னை அடிமைப் படுத்தி, சில நேரம் அவமான படுத்துகிறாயோ?
கவிதை
அனைவரும் புரிந்துகொள்ள நான் கட்டுரை எழுதவில்லை, என்னவளுக்கு மட்டுமே புரியும் வரிகள்தான் கவிதை.
நாம் வாழ்ந்த நாட்களை நினைத்து பார், அப்போது தான் தெரியும், அவை நினைவுகள் இல்லை, உயிர் உள்ள நிஜங்கள் என்று....!
No comments:
Post a Comment